இந்தியாவில் புத்தாக்கம் செய்வோம் (Innovate In India - i3)
August 4 , 2017 2926 days 1209 0
“இந்தியாவில் புத்தாக்கம் செய்வோம்” என்று பெயரிடப்பட்ட தேசிய உயிரிமருந்தியல் இயக்கமானது, இந்தியாவில் தொழிலகங்கள் மற்றும் கல்விக் கழகங்களை உள்ளடக்கிய முதல் இயக்கமாகும்.
இவ்வியக்கமானது, இந்தியாவில் உயிரிமருந்தியல் வளர்ச்சியினை மேம்படுத்தி ஊக்குவிக்கக்கூடிய ஒன்றாகும்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தினுள் உள்ள உயிரித்தொழில் நுட்பத்துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறையான உயிரித்தொழில் நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவிக் குழுவினால் (BIRAC) இந்த இயக்கம் நடைமுறைப் படுத்தப்படுகின்றது. மேலும் இந்த இயக்கத்திற்கு உலகவங்கி பகுதியளவு நிதி உதவி அளிக்கிறது.