இந்தியாவில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஏற்படும் உயிரிழப்புகள்
July 24 , 2026 79 days 151 0
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா முழுவதும் கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் கழிவு நீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் போது 332 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு 38 உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ளது. இது மகாராஷ்டிரா (58) மற்றும் அரியானாவுக்கு (47) அடுத்தப படியாக நாட்டில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
மனிதக் கழிவுகளை அள்ளுவோராகப் பணியமர்த்துவதைத் தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வுச் சட்டம், 2013 மனிதக் கழிவுகளை அள்ளுவோராகப் பணியமர்த்துவதைத் தடை செய்கிறது மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வை வழங்குகிறது.
மனிதக் கழிவுகளை அள்ளுவோராகப் பணியமர்த்துதல் மற்றும் உலர் கழிப்பறைகள் கட்டுதல் (தடை) சட்டம், 1993 என்பது மனிதக் கழிவுகளை அள்ளுவதையும் உலர் கழிப்பறைகள் கட்டுவதையும் தடைசெய்த முதல் மத்திய சட்டமாகும்.
இந்திய உச்ச நீதிமன்றம் (2023), கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்வதை முழுமையாக இயந்திரமயமாக்கவும், பாதிக்கப் பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதை உறுதி செய்யவும் அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.