2014 ஆம் ஆண்டிற்கு முன்பு 51,348 ஆக இருந்த மருத்துவக் கல்வி இடங்களின் எண்ணிக்கையானது தற்போது 89,875 ஆக உயர்ந்துள்ளது.
இது 75% உயர்வாகும்.
மருத்துவ முதுகலைக் கல்வி இடங்களில் எண்ணிக்கையானது 93% உயர்ந்துள்ளது.
இந்தியாவில் உள்ள 80% பதிவு செய்த அல்லோபதி மருத்துவர்கள் மற்றும் 5.65 லட்சம் ஆயுஷ் மருத்துவர்களைக் கருத்தில் கொள்ளும் போது மருத்துவர் மற்றும் மக்கள் தொகை இடையிலான விகிதமானது 1 : 834 ஆக உள்ளது.