TNPSC Thervupettagam

இந்தியாவில் மாசுபட்ட நதித் தளங்கள்

September 29 , 2025 4 days 46 0
  • இந்தியாவில் குளிப்பதற்குத் தகுதியற்ற நதிப் பகுதிகளின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 815 ஆக இருந்த நிலையில், 2023 ஆம் ஆண்டில் 807 ஆகக் குறைந்துள்ளது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) தெரிவித்துள்ளது.
  • லிட்டருக்கு 30 மி.கி என்ற அளவிற்கு மேலான உயிரிய உயிரிவளி/ஆக்ஸிஜன் தேவை (BOD) கொண்ட முன்னுரிமை 1 ஆக வகைப்படுத்தப்பட்ட 'மிகவும் மாசுபட்ட' நதிப் பகுதிகளின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 45 ஆக இருந்த நிலையில், 2023 ஆம் ஆண்டில் அதன் எண்ணிக்கை 37 ஆகக் குறைந்தது.
  • 2023 ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் அதிக மாசுபட்ட நதிப் பகுதிகள் (54) இருந்தன என்ற நிலையில் அதைத் தொடர்ந்து கேரளா (31), மத்தியப் பிரதேசம் (18), மற்றும் மணிப்பூர் (18) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • அவசரச் சீரமைப்பு தேவைப்படும் முன்னுரிமை 1 நதிப் பகுதிகளின் அதிகபட்ச எண்ணிக்கை (தலா ஐந்து) தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பதிவாகியுள்ளன.
  • இந்தியா முழுவதும் உள்ள ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள் மற்றும் வடிகால்கள் உள்ளிட்ட 4,736 இடங்களில் உள்ள நீர் தரத்தை CPCB கண்காணிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்