இந்தியாவில் மின்சார வாகன விநியோகத்தை வங்கிமுறைக்கு உட்படுத்துதல்
January 26 , 2022 1285 days 497 0
நிதி ஆயோக் அமைப்பானது சமீபத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னுரிமைத் துறைக் கடன் வழங்கீட்டு வழிமுறைகளில் மின்சார வாகன விநியோகத்தினை உள்ளடக்குவதன் அவசியத்தினைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தினைப் பற்றியும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த அறிக்கையினை, அமெரிக்காவைச் சேர்ந்த இலாப நோக்கமற்ற அமைப்பான ராக்கி மவுன்டேன் இன்ஸ்டிடியூட் (RMI) மற்றும் RMI இந்தியா ஆகியவற்றுடன் இணைந்து நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கியுள்ளது.