TNPSC Thervupettagam

இந்தியாவில் மின் கழிவுகள்

January 28 , 2026 3 days 51 0
  • நிதி ஆயோக் மற்றும் எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனம் (டெரி) ஆகியவை இணைந்து மின் கழிவுகள் மற்றும் லித்தியம்-அயன் பேட்டரி மறுசுழற்சி குறித்த அறிக்கையை வெளியிட்டன.
  • சுழற்சிப் பொருளாதாரம் என்பது பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களைப் பகிர்ந்து கொள்வது, குத்தகைக்கு விடுவது, மீண்டும் பயன்படுத்துவது, பழுதுபார்ப்பது, புதுப்பிப்பது மற்றும் மறுசுழற்சி செய்வது ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • இந்தியாவின் மின்னணுக் கழிவுகளில் சுமார் 78% முறைசாரா துறையால் பிரித்தெடுக்கப் படுத்தப்படுகிறது என்பதோடு இதில் 10-20% பொருட்கள் மட்டுமே மீட்கப்படுகின்றன.
  • 2024ல் மின்னணுக் கழிவுகளின் உற்பத்தி சுமார் 6.19 மில்லியன் மெட்ரிக் டன்களை எட்டியது என்பதோடு மேலும் இது 2030க்குள் 14 மில்லியன் மெட்ரிக் டன்களாக உயரக் கூடும்.
  • இந்தியாவின் மின்னணுக் கழிவு மேலாண்மை விதிகள் (EWMR), 2022 மற்றும் மின்கலன் கழிவு மேலாண்மை விதிகள் (BWMR), 2022 ஆகியவை மறு சுழற்சி மற்றும் சேகரிப்பை கட்டாயமாக்குகின்றன என்பதோடு மேலும் அவை நிலத்தில் கொட்டி அழிப்பதைத் தடை செய்கின்றன.
  • விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பை (EPR) விரிவுபடுத்துதல், மின்கலன் மறு சுழற்சியை இந்திய கார்பன் சந்தையில் ஒருங்கிணைத்தல், மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவை சில பரிந்துரைகளில் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்