இந்தியாவில் முதலாவது பகல்/இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி
October 29 , 2019 2127 days 794 0
இந்தியா தனது முதலாவது பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை கொல்கத்தாவில் அடுத்த மாதம் வங்க தேசத்திற்கு எதிராக நடத்தவுள்ளது
நவம்பர் 22 ஆம் தேதி தொடங்கும் வங்க தேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஈடன் கார்டன் மைதானத்தில் ஒளி வெள்ளத்தின் கீழ் விளையாடப்பட இருக்கின்றது.
இந்தியாவில் இளஞ்சிவப்பு நிறப் பந்தைக் கொண்டு விளையாடப்படும் முதலாவது டெஸ்ட் போட்டி இதுவாகும்.
ஐந்து நாட்கள் கொண்ட ஆட்டத்திற்கு இது ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
2015 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து இதுவரை 11 பகல்-இரவு டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன.