இந்தியாவில் முதல்முறையாக உப்பு நீர் மூலம் இயங்கும் விளக்கு
August 20 , 2022 1093 days 523 0
‘ரோஷிணி’ எனப்படும் உப்பு நீர் மூலம் இயங்கும் விளக்கு ஆனது இந்தியாவில் முதல் முறையாக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது LED விளக்குகளுக்கு ஆற்றலை வழங்குவதற்காக கடல்நீரைப் பயன்படுத்துகிறது.
இது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் இது போன்ற முதல் வகை விளக்காகும்.
இது கடல்சார் ஆராய்ச்சிக்காக சென்னையில் உள்ள தேசியக் கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தால் இயக்கப்படும் சாகர் அன்வேஷிகா எனப்படும் கடலோர ஆராய்ச்சிக் கப்பலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
உப்பு நீர் மூலம் இயக்கப்படும் இந்த விளக்குகள் LED வகை விளக்குகளுக்கு ஆற்றலை வழங்குவதற்காகவே, பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுப் பொருத்தப்பட்ட இரு மின்முனைகளுக்கு இடையே கடல்நீரை மின்பகுளிகளாகப் பயன்படுத்துகின்றன.