உலக சுகாதார அமைப்பின் படி, வயிற்றுப் போக்கு நோய் ஆனது 1 முதல் 59 மாத வயதுடைய குழந்தைகளிடையேயான உயிரிழப்பிற்கான மூன்றாவது முக்கியக் காரணமாக உள்ளது.
இது உலகளவில் 4,43,832 ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் உயிரிழப்புகளுக்கும், முதல் 9 வயதுடைய குழந்தைகளில் கூடுதலாக சுமார் 50,851 உயிரிழப்புகளுக்கும் வழி வகுத்தது.
ஒவ்வோர் ஆண்டும் 1.7 பில்லியன் குழந்தைப் பருவப் பாதிப்புகளுடன், இந்தியா இந்தப் பாதிப்பு எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்கப் பங்கை வகிக்கிறது.
பாதுகாப்பான குடிநீர் இல்லாத நிலையிலான மோசமான சுகாதாரப் பிரச்சினைகள் சுமார் 780 மில்லியன் மக்களைப் பாதிக்கின்றன மற்றும் சுமார் 2.5 பில்லியன் மக்கள் மேம்பட்ட சுகாதாரம் இல்லாத நிலையில் உள்ளனர்.