2014 ஆம் ஆண்டில், இரங்கராஜன் குழுவானது வறுமைக் கோட்டினை (வரம்பினை) கிராமப்புறங்களுக்கு மாதத்திற்கு 972 ரூபாயாகவும், நகர்ப்புறங்களுக்கு மாதத்திற்கு 1,407 ரூபாயாகவும் நிர்ணயித்தது.
2014 ஆம் ஆண்டில் இந்த அளவீட்டின்படி சுமார் 29.5 சதவீத இந்தியர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருந்தனர்.
2022–23 ஆம் ஆண்டிற்கான வீட்டு நுகர்வு செலவினக் கணக்கெடுப்புத் தரவைப் பயன்படுத்தி 20 முக்கிய மாநிலங்களுக்கான வறுமை சார்ந்த மதிப்பீடுகளை இந்திய ரிசர்வ் வங்கி புதுப்பித்தது.
ஊட்டச்சத்து, பள்ளிப்படிப்பு, சுகாதாரம், மின்சாரம் மற்றும் வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட 12 குறிகாட்டிகளைப் பயன்படுத்தி அரசாங்கம் தற்போது பல பரிமாண வறுமையை அளவிடுகிறது.
இந்தியாவில் 2013–14 ஆம் ஆண்டில் 29.17 சதவீதமாக இருந்த பல பரிமாண வறுமை ஆனது 2022–23 ஆம் ஆண்டில் 11.28 சதவீதமாகக் குறைந்துள்ளது.