இந்தியாவில் வாகன எரிபொருள் விற்பனை செய்யும் புதிய நிறுவனங்கள்
July 22 , 2021 1474 days 630 0
இந்தியாவில் வாகன எரிபொருட்களை விற்பனை செய்வதற்காக ஏழு புதிய நிறுவனங்களுக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகமானது அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், RBML சொல்யூசன்ஸ் இந்தியா, சென்னையிலுள்ள IMC நிறுவனம், அசாம் எரிவாயு நிறுவனம் (அசாம் அரசு நிறுவனம்), ஆன்சைட் எனர்ஜி, மனாஸ் அக்ரோ இன்டஸ்ட்ரீஸ் மற்றும் M.M. அக்ரோடெக் ஆகியவை அங்கீகாரம் பெற்ற அந்த ஏழு நிறுவனங்களாகும்.
விற்பனை அங்கீகாரத்தைப் பெறுவதற்கு ஒரு நிறுவனமானது குறைந்தபட்சம் 100 விற்பனை நிலையங்களை அமைத்திருக்க வேண்டும் என 2019 ஆம் ஆண்டு விதிமுறைகளில் கூறப் பட்டுள்ளது.