TNPSC Thervupettagam

இந்தியாவில் வெளிப்படைத்தன்மை பற்றிய அறிக்கை

August 2 , 2022 1115 days 533 0
  • ட்விட்டர் ஊடகமானது சமீபத்தில் ஒரு வெளிப்படைத் தன்மை மீதான அறிக்கையை வெளியிட்டது.
  • ட்விட்டர் பக்கத்தில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களால் வெளியிடப் பட்ட உள்ளடக்கத்தை நீக்கச் செய்வதற்கான சட்டரீதியான கோரிக்கை என்பது உலகளவில் இந்தியாவில் தான் அதிக எண்ணிக்கையில் முன் வைக்கப்படச் செய்கின்றன.
  • இதன்படி இந்தியா 114 கோரிக்கைகளை முன்வைத்தது.
  • ட்விட்டர் கணக்குத் தகவல்களைக் கேட்பதில் அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது.
  • உலகளவிளாவிய மொத்தத் தகவல் கோரிக்கைகளில் இந்தியா 19% கோரிக்கைகளை முன் வைத்துள்ளது..
  • 2021 ஆம் ஆண்டு ஜூலை-டிசம்பர் மாதங்களில் அனைத்து வகையானப் பயனர்களின் உள்ளடக்கங்களை முடக்குவதற்கு, ட்விட்டருக்கு ஆணைகளை வழங்கிய முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
  • இந்தியாவிற்கு அடுத்தபடியாக, துருக்கி, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் ஆகிய சில நாடுகளும் அதிகச் சட்டப்பூர்வ கோரிக்கைகளை முன் வைக்கின்றன.
  • துருக்கி 78 கோரிக்கைகளையும், ரஷ்யா 55 கோரிக்கைகளையும், பாகிஸ்தான் 48 கோரிக்கைகளையும் முன் வைத்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்