ஹைதராபாத்தைச் சேர்ந்த விர்சோ பயோடெக் மற்றும் RDIF எனப்படும் இரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் ஆகியவை இணைந்து இந்தியாவில் ஸ்புட்னிக் V என்பதின் 200 மில்லியன் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை அறிவித்துள்ளன.
ஸ்புட்னிக் V என்பது இரஷ்யாவின் கோவிட் – 19 தடுப்பூசியாகும்
இந்த தொழில்நுட்பப் பரிமாற்றமானது 2021 ஆம் ஆண்டில் இரண்டாம் காற்பங்கில் (Quarter) நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முழு அளவிலான மற்றும் வணிகரீதியான உற்பத்தி தொடங்கும்.