இந்தியாவில் ‘மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள்’ : அமெரிக்க அரசின் அறிக்கை
March 31 , 2023 869 days 430 0
இது அமெரிக்கச் சட்டப் பேரவையின் கட்டளையின் கீழ், வெளியுறவுத் துறையின் ஒரு பணியகத்தின் தலைமையில் மேற்கொள்ளப்படும் ஒரு வருடாந்திர நடவடிக்கை ஆகும்.
இது 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த சில குறிப்பிடத்தக்க மனித உரிமைகள் சார்ந்த பிரச்சினைகளைப் பட்டியலிட்டுள்ளது.
அவை சட்டவிரோதமான மற்றும் கொடுங்கோண்மை சார்ந்த கொலை, பத்திரிக்கைச் சுதந்திரம் மற்றும் சமய மற்றும் இனச் சிறுபான்மையினரைக் குறி வைக்கும் வன்முறை உள்ளிட்டவையாகும்.
நீதிமன்றத்திற்குப் புறம்பான கொலைகள், காவல்துறை மற்றும் சிறைத் துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் சித்திரவதை அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற, அல்லது இழிவாக நடத்துதல் அல்லது தண்டனை மற்றும் கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான சிறை வாழ் நிலைமைகள் போன்ற மனித உரிமை மீறல்கள் ஆகியவை இப்பட்டியலில் குறிப்பிடப் படுகின்றன.