TNPSC Thervupettagam

இந்தியாவில் E20 பெட்ரோல் 2025

August 21 , 2025 16 hrs 0 min 44 0
  • பொருளாதார நன்மைகள் மற்றும் உமிழ்வுக் குறைப்பு ஆகியவற்றினை இலக்காகக் கொண்டு, நாடு தழுவிய அளவில் E20 பெட்ரோல் (20% எத்தனால் கலவை) அறிமுகத்தினை இந்தியா விரைவுபடுத்தியது.
  • கரும்பு மற்றும் தானியங்களிலிருந்துப் பெறப்படும் எத்தனால், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதோடு, அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்துகிறது (2025 ஆம் ஆண்டில் 43,000 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது).
  • E10 உடன் ஒப்பிடும்போது E20 ஆனது கார்பன் உமிழ்வை 30% வரை குறைக்கிறது; அதிக ஆக்டேன் உள்ளடக்கம் ஆனது எரிப்புத் திறனை மேம்படுத்துகிறது மற்றும் என்ஜினில் முறையற்ற எரிப்பு (என்ஜின் நாக்கிங்) நிகழ்வதைக் குறைக்கிறது.
  • ஆனால் நவீன கால கார்களில் எரிபொருள் திறன் 5-7% குறையக் கூடும்; பழைய வாகனங்களில் (BS3/BS4) 20% வரை குறையக் கூடும்.
  • இந்த எரிபொருள் பயன்பாட்டிற்குப் பொருந்தாத வாகனங்களில் எத்தனால் ஆனது இரப்பர் சீல்கள் மற்றும் பாகங்களைச் சேதப்படுத்தும் என்றாலும் அதற்கான பாகமாற்றுச் செலவுகள் குறைவாகவே இருக்கும்.
  • புதிய கார்கள் (BS6 கட்டம் 2, 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிந்தைய மாதிரிகள்) பெரும்பாலும் E20 பெட்ரோல் பயன்பாட்டிற்கு தயாராக உள்ளன.
  • E20 பெட்ரோல் பயன்பாட்டிற்கான மாற்றத்தின் போது எத்தனாலுக்கு இணக்கமான பாகங்களின் வழக்கமான பராமரிப்பு மற்றும் பயன்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
  • அதிகாரிகள் E20 பெட்ரோலினை தூய்மையான மின்சாரப் போக்குவரத்தினை நோக்கிய "இணைப்பு எரிபொருள்" என்று அழைக்கின்றனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்