இந்தியக் கடற்படை மற்றும் விமானப் படை ஆகியவை அமெரிக்கக் கடற்படையின் ரொனால்டு ரீகன் எனும் ஒரு கடற்படை விமானந் தாங்கிக் கப்பல் அழிப்புக் குழுவுடனான இரண்டு நாள் கடற்படைப் பயிற்சியினை மேற்கொண்டன.
இந்தப் பயிற்சியானது இந்தியப் பெருங்கடல் பிராந்தியப் பகுதியில் நடைபெற்றது.
இந்தியக் கடற்படையின் ஐ.என்.எஸ். கொச்சி மற்றும் தேக் (Teg) ஆகிய போர்க் கப்பல்களும் P-8I ரக நீள்வரம்புடைய கடல்சார் ரோந்து விமானம் மற்றும் MiG 29K ரக போர் விமானங்கள் ஆகியவையும் இந்தப் பயிற்சியில் பங்கேற்றன.