TNPSC Thervupettagam

இந்தியா இணையம் 2019

November 16 , 2019 2091 days 827 0
  • இந்திய இணையம் மற்றும் கைபேசி மன்றமானது (IAMAI - Internet And Mobile Association of India) “இந்தியா இணையம் 2019” என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இணைய ஊடுருவல் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் 100 நபர்களில் 12 வயதுக்கு மேற்பட்ட இணையத்தைப் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கையாக வரையறுக்கப்படுகின்றது.
  • இந்த அறிக்கையின் படி, தேசியத் தலைநகர்ப் பகுதியான தில்லியில் (69%) இணைய ஊடுருவல் விகிதம் மிக அதிகமாக உள்ளது. இதைத் தொடர்ந்து கேரளாவில் (54%) இணைய ஊடுருவல் அதிகமாக உள்ளது.
  • இணைய ஊடுருவல் வீதமானது ஒடிசா (25), ஜார்க்கண்ட் (26), பீகார் (28) ஆகிய மாநிலங்களில் மிகக் குறைவாக இருக்கின்றது.
  • மேலும் கேரளா, தமிழ்நாடு மற்றும் தில்லி ஆகியவற்றில் பெண் இணையப் பயனர்கள் அதிகம் உள்ளனர் என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • கிராமப்புற மற்றும் நகர்ப்புற இணைய இணைப்புகளின் எண்ணிக்கையில் பெரும் இடைவெளியைக் கொண்ட மாநிலங்களில் கேரளாவும் இடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்