இந்தியா-இத்தாலி ஆகிய நாடுகளுக்கிடையேயான அறிவியல் தொழில்நுட்ப மாநாடு
November 3 , 2018 2603 days 861 0
அக்டோபர் 30 அன்று புது தில்லியில் இந்தியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கிடையேயான இரண்டு நாள் தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது. இது உயர் தரம் மற்றும் உயர்ந்த தாக்கம் ஏற்படுத்தக்கூடிய கூட்டு ஆராய்ச்சித் திட்டங்களை ஊக்கப்படுத்த அழைப்பு விடுக்கிறது.
இம்மாநாடு புதுப்பிக்கக்கூடிய ஆற்றல், தூய்மையான தொழில் நுட்பம், தகவல் தொடர்பு தொழில்நுட்பம், சுகாதாரம், விண்வெளி, கல்வி மற்றும் கலாச்சார பாரம்பரியப் பாதுகாப்பு ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தியது.
இக்கருத்தரங்கை இத்தாலி அரசாங்கத்துடன் இணைந்து அறிவியல் தொழில்நுட்பத் துறை (DST - Department of Science and Technology - DST) மற்றும் இந்தியத் தொழிற்துறை கூட்டமைப்பு (CII - Confederation of Indian Industry - CII) ஆகியவை இணைந்து நடத்தின.