TNPSC Thervupettagam

இந்தியா-இந்தோனேசியா பிரம்பானன் புனரமைப்பு

March 21 , 2026 2 days 36 0
  • கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதற்காக பிரம்பானன் கோயில் வளாகத்தைப் புனரமைக்க இந்தியாவும் இந்தோனேசியாவும் இணைந்துள்ளன.
  • 9-ஆம் நூற்றாண்டில் சஞ்சய வம்சத்தால் கட்டப்பட்ட இந்தக் கோயில், இந்தோனேசியாவின் மிகப்பெரிய இந்து கோயில் வளாகமாகும் என்பதோடு இது ஒரு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளமாகும் (1991).
  • இது இந்து மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவனுக்கு அர்ப்பணிக்கப் பட்டது என்பதோடு இதில் சிவன் கோயில் சுமார் 47 மீட்டர் உயரம் கொண்டது.
  • இராமாயண நிகழ்வுகளின் செதுக்கல்களுடன் சுமார் 240 கோயில்கள் உள்ள இந்த வளாகம் தென்னிந்திய (பல்லவ) கட்டிடக்கலைத் தாக்கத்தை வலுவாகக் காட்டுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்