இந்தியா உலகலாவிய சுற்றுச்சூழல் வசதியை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் உலகவங்கியுடன் கையெழுத்திட்டது
August 18 , 2017 2998 days 1321 0
உலகலாவிய சுற்றுச்சூழல் வசதிக்காக “சுற்றுசூழல் சேவை மேம்பாட்டு திட்டம்”என்ற திட்டத்தை இந்தியா உலக வங்கியுடன் 24,64 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டாலர் செலவில் செயல் படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு தேவையான 24,64 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டாலர் நிதியை உலக வங்கியானது அதன் பொறுப்பான்மையிலுள்ள உலகலாவிய சுற்றுசூழல் நிதியிலிருந்து வழங்குகிறது.
இத்திட்டத்திற்கான கால அளவு 5 ஆண்டுகள் ஆகும்.
பசுமை இந்தியா தேசிய திட்டத்தின் கீழுள்ள இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழுவினால் சத்திஸ்கர் மற்றும் மத்திய பிரதேஷ் மாநிலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகமானது தெரிவித்துள்ளது.
துறையின் நிறுவன திறனை வலுப்படுத்துதல், வன சுற்றுச்சூழல் சேவையை அதிகரிக்க சமூக நிறுவனங்கள் அமைத்தல், மற்றும் மத்திய இந்திய மலைப்பகுதிகளின் வன சார்புடைய சமூகங்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.