உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிலிருந்து உலகிலேயே அதிகளவில் கோதுமை இறக்குமதி செய்யும் எகிப்து நாடானது, தனது நாட்டில் கோதுமை இறக்குமதி செய்வதற்கு இந்திய நாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியா சுமார் ஒரு மில்லியன் டன் கோதுமையை அந்நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய உள்ளது.
2020 ஆம் ஆண்டில் உலகளாவிய கோதுமை உற்பத்தியில் இந்தியா 14.14 சதவீத பங்கைக் கொண்டு உலகின் இரண்டாவது பெரிய கோதுமை உற்பத்தியாளராக இருந்தது.
பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, பீகார், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகியவை கோதுமை விளையும் முக்கிய மாநிலங்கள் ஆகும்.