இந்தியா-ஐக்கியப் பேரரசு இடையிலான இணைப்பு மற்றும் புத்தாக்க மையம்
October 15 , 2025 89 days 122 0
இந்தியா மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகியவை இணைந்து நான்கு ஆண்டுகளில் 282 கோடி ரூபாய் முதலீட்டில் இந்தியா- ஐக்கியப் பேரரசு இணைப்பு மற்றும் புத்தாக்க மையத்தினை (CIC) தொடங்கியுள்ளன.
CIC என்பது 6G, AI மற்றும் பாதுகாப்பான தகவல் தொடர்புகள் உள்ளிட்ட அடுத்தத் தலைமுறை நுட்பத்திலான தொலை தொடர்பு தொழில்நுட்பங்களை மையமாகக் கொண்ட ஓர் இருதரப்பு ஆராய்ச்சித் தளமாகும்.
இந்தியா- ஐக்கியப் பேரரசு 2035 ஆம் ஆண்டு தொலைநோக்குத் திட்டத்துடன் ஒருங்கிணைந்த பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் மீள்திறன் கொண்ட டிஜிட்டல் தகவல்தொடர்புகளை மேம்படுத்துவதை இந்த மையம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வலையமைப்புப் பயனுறு திறன் வடிவமைத்தலுக்கான செயற்கை நுண்ணறிவு, கிராமப்புற இணைப்புக்கான நிலப்பரப்பு சாராத வலையமைப்புகள் மற்றும் தொலைத்தொடர்பு இணையவெளிப் பாதுகாப்பு ஆகியவை முக்கிய கவனம் செலுத்தப் படும் பகுதிகளில் அடங்கும்.
டிஜிட்டல் இணைப்பு சார்ந்தப் புத்தாக்கங்களில் கல்வி, தொழில்துறை மற்றும் அரசு ஒத்துழைப்புக்கான மையமாக CIC செயல்படும்.