இந்தியா-ஐக்கியப் பேரரசு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் 2025
August 21 , 2025 16 hrs 0 min 31 0
இந்தியா மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகிய நாடுகள் 2025 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதியன்று விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (CETA) கையெழுத்திட்டன.
மேலும், இந்த ஒப்பந்தத்தில் டிஜிட்டல் வர்த்தகம் குறித்த ஒரு பிரத்யேக அத்தியாயமும் இடம் பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தமானது, மின்னணு கையொப்பங்கள் மற்றும் ஒப்பந்தங்களை அங்கீகரிக்கிறது என்பதோடு மேலும் இரு தரப்பினரும் பரஸ்பர அங்கீகாரத்தை நோக்கிச் செயல்பட உறுதியளிக்கிறது.
இது காகித அறிக்கையிடல் சார்ந்த வேலைகளைக் குறைத்து சீரான மென்பொருள் ஏற்றுமதிகளை எளிதாக்குகிறது.
இந்த ஒப்பந்தமானது, மின்னணுப் பரிமாற்றங்களில் சுங்க வரி ரத்தினை உறுதி செய்கிறது என்பதோடு இது 30 பில்லியன் டாலர் மதிப்பிலான மென்பொருள் ஏற்றுமதிச் சந்தையைப் பாதுகாக்கிறது.