இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், பிரான்சு - முத்தரப்பு முன்னெடுப்பு
February 15 , 2023 1010 days 414 0
இந்தியா, பிரான்சு மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அணுசக்தி மற்றும் சூரிய ஆற்றல் ஆகிய துறைகளில் இணைந்து செயல்படுவதற்காக வேண்டி ஒரு கூட்டாண்மையை உருவாக்குவதற்கு ஒப்புக் கொண்டுள்ளன.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளச் செய்வதற்கும், பல்லுயிர்த் தன்மையினைப் பாதுகாப்பதற்குமான முயற்சிகளில் அவை ஒன்றிணைந்துச் செயல்பட உள்ளன.
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத்தின் போது நடைபெற்ற மூன்று அமைச்சர்களின் சந்திப்பின் போது இந்த முத்தரப்புக் கூட்டமைப்பு குறித்து முதலில் விவாதிக்கப்பட்டது.