TNPSC Thervupettagam

இந்தியா-ஐ.நா. உலகளாவியத் திறன் மேம்பாட்டு முன்னெடுப்பு

August 7 , 2025 52 days 81 0
  • 2025 ஆம் ஆண்டு இந்தியா-ஐ.நா. உலகளாவியத் திறன் மேம்பாட்டு முன்னெடுப்பின் கீழான முதல் நான்கு திட்டங்கள் ஆனது ஆகஸ்ட் 01 ஆம் தேதியன்று, ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து வெளியுறவு அமைச்சகத்தினால் தொடங்கப்பட்டன.
  • இந்த முன்னெடுப்பானது, தெற்கு நாடுகளின் ஒத்துழைப்பை ஆதரிப்பதோடு, வளர்ந்து வரும் நாடுகள் சிறப்பு பயிற்சி மூலம் SDG இலக்குகளை அடைய உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த திட்டங்களில் உலக உணவுத் திட்ட ஆதரவுடன் நேபாளத்தில் அரிசி ஊட்டச்சத்து செறிவூட்டல் மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மை ஆகியவை அடங்கும்.
  • ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்துடன் இணைந்து சாம்பியா மற்றும் லாவோ PDR ஆகிய நாடுகளுக்கு ஒரு டிஜிட்டல் சுகாதார தளம் உருவாக்கப்படும்.
  • ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்துடன் இணைந்து, ஐந்து கரீபியன் நாடுகளில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தயார்நிலைக்கான ஆதரவுகள் வழங்கப்படும்.
  • ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் ஆதரவுடன் தெற்கு சூடானில் ஒரு தொழில் பயிற்சித் திட்டம் தொடங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்