இந்தியா-ஐ.நா. வளர்ச்சி மேம்பாட்டு ஒத்துழைப்பு நிதியம்
February 5 , 2018 2708 days 883 0
தெற்கத்திய நாடுகளிடையே ஒத்துழைப்பை (South-South Co-operation) ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட இந்தியா-ஐ.நா மேம்பாட்டு ஒத்துழைப்பு நிதியத்திற்கு (India – UN Development Partnership Fund) இந்தியா கூடுதலாக 1 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது.
நிதியம் பற்றி
வளரும் மற்றும் குறைவான வளர்ச்சியுடைய நாடுகளில் வறுமை மற்றும் பட்டினியை ஒழிப்பதற்கும், சுகாதாரத்தை அதிகரிப்பதற்கும், கல்வி மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும், தூய்மையான குடிநீர் மற்றும் ஆற்றலுக்கு அணுகலை ஏற்படுத்துவதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.
இந்தியா மற்றும் தெற்கத்திய நாடுகளின் ஒத்துழைப்பிற்கான ஐ.நா. அலுவலகத்திற்கு (United Nations Office for South-South Co-operation) இடையேயான கூட்டிணைவின் கீழ் இந்த நிதியம் அமைக்கப்பட்டுள்ளது.
வளரும் மற்றும் குறைவான வளர்ச்சியுடைய நாடுகளின் நீடித்த மேம்பாட்டிற்கான திட்டங்களுக்கு நிதியளிக்க இந்த நிதியம் அமைக்கப்பட்டுள்ளது.