இந்தியா-செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டிற்கான சின்னம்
October 11 , 2025 27 days 71 0
2026 ஆம் ஆண்டு இந்தியா-செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டிற்கான அதிகாரப் பூர்வ சின்னத்தினை இந்திய அரசு வெளியிட்டது.
இந்த உச்சி மாநாடானது, 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் புது டெல்லியில் நடைபெற உள்ளது.
இந்த சின்னத்தில் நெறிமுறை சார்ந்த ஆளுகை, நீதி மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களைக் குறிக்கும் அசோக சக்கரம் ஆனது இடம்பெற்றுள்ளது.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தினால் (MeitY) நடத்தப்படுகின்ற இந்த உச்சி மாநாடு ஆனது உள்ளடக்கிய வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் சமூக முன்னேற்றத்தில் செயற்கை நுண்ணறிவின் பங்கை எடுத்துக்காட்டும்.