TNPSC Thervupettagam

இந்தியா-ஜப்பான் கடல்சார் பாதுகாப்பு ஒப்பந்தம்

August 24 , 2026 11 hrs 0 min 16 0
  • பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்காக, இந்தியா மற்றும் ஜப்பான் இடையே 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த ஏற்பாட்டுக் குறிப்பாணை (MoA) கையெழுத்தானது.
  • இந்த ஒப்பந்தம் கடல்சார் கள விழிப்புணர்வு (MDA), தகவல் பகிர்வு, தேடல் மற்றும் மீட்பு (SAR), மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் (HADR), மற்றும் கடல்வழி தகவல் தொடர்பு பாதைகளின் (SLOCs) பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் இந்திய கப்பல் கட்டும் தளங்களை அதிக அளவில் பயன்படுத்துவது உட்பட கடற்படைப் பயிற்சிகள், பரஸ்பர துறைமுக வருகைகள், தளவாட ஆதரவு, கப்பல் பழுதுபார்ப்பு மற்றும் கடற்படை கப்பல் கட்டும் ஒத்துழைப்பு ஆகியவற்றை இரு நாடுகளும் வலுப்படுத்தும்.
  • இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் ஜப்பானின் கையகப்படுத்தல், தொழில்நுட்பம் மற்றும் தளவாடங்கள் நிறுவனம் (ATLA) ஆகியவை மேம்பட்ட பாதுகாப்புத் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த உள்ளதோடு இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் பாதுகாப்பு உபகரண பரிமாற்றத் திட்டமாக UNICORN உள்ளது.
  • சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியாவும் ஜப்பானும் மீண்டும் உறுதிப்படுத்தின. மேலும் தர்மா கார்டியன், ஜிமெக்ஸ் (JIMEX) மற்றும் வீர் கார்டியன் 26 போன்ற பயிற்சிகளை விரிவுபடுத்துவதாகவும் தெரிவித்தன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்