புது தில்லியில் நடைபெற்ற உயர்மட்ட காலநிலை பேச்சுவார்த்தையின் போது, காலநிலை தகவமைப்பு மற்றும் மீள்தன்மை குறித்த ஒத்துழைப்பை இந்தியாவும் ஜெர்மனியும் விரிவுபடுத்தியுள்ளன.
சர்வதேச காலநிலை முன்முயற்சியின் (IKI) கீழ் இந்தியாவிற்கு சுமார் 20 மில்லியன் யூரோக்கள் வரை மானியம் வழங்குவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது.
இந்தத் திட்டம் இமயமலை, தீவுப் பிரதேசங்கள், மேற்குத் தொடர்ச்சி மலைகள், வட கிழக்கு மற்றும் கீழ் கங்கை வெள்ளப் பெருக்குப் பகுதிகளில் உள்ள பாதிக்கப்படக் கூடிய சூழலியல் அமைப்புகளில் கவனம் செலுத்தும்.
இது வன மறுசீரமைப்பு, பல்லுயிர் வழித்தடங்கள், வெள்ளம் மற்றும் அரிப்பு கட்டுப்பாடு, நிலத்தடி நீர் மறுசீரமைப்பு மற்றும் சமூகத்தினர் தலைமையிலான இயற்கை வள மேலாண்மை உள்ளிட்ட சூழலியல் சார்ந்த தழுவலை (EbA) ஊக்குவிக்கும்.
இந்த நிதியானது நீண்டகால நிலைத் தன்மைக்கான கலப்பு நிதி, பல்லுயிர் வரவுகள் மற்றும் காப்பீட்டு அடிப்படையிலான இடர்களுக்கான தீர்வுகளை ஆராயும்.