இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம்
August 16 , 2025 15 hrs 0 min 16 0
நடைபெற்று வரும் இஸ்ரேல்-காசா போர் ஆனது IMEC வழித்தடத்தின் முன்னேற்றத்தை சீர்குலைத்துள்ளது.
மேம்படுத்தப்பட்ட இணைப்பு மூலம் இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு கப்பல் போக்குவரத்து நேரத்தை சுமார் 40% குறைப்பதை இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) நோக்கமாகக் கொண்டுள்ளது.
IMEC தடத்தின் பாதையில் இரண்டு பிரிவுகள் உள்ளன:
துறைமுகங்கள் மற்றும் இரயில் வழியாக இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வளைகுடாவிற்கு, மற்றும்
இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகத்திலிருந்து கிரீஸ் மற்றும் இத்தாலி வழியாக ஐரோப்பாவிற்கான பிரிவு.
இந்தத் திட்டமானது, 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் G20 தலைமைத்துவ காலத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த மோதல் ஆனது, கப்பல் போக்குவரத்துக்கான அதிக காப்பீட்டுத் தவணைகள் போன்ற அபாயங்களை அதிகரிக்கிறது மற்றும் IMEC செயல்படுத்தலைக் குறை மதிப்பிற்கு உட்படுத்தும் புவிசார் அரசியல் பதட்டங்களை மோசமாக்குகிறது.
சவால்கள் இருந்தபோதிலும், UAE மற்றும் சவுதி அரேபியாவுடனான இந்தியாவின் வலுவான உறவுகள், இந்த வழித்தடத்தின் சில பகுதிகளை, குறிப்பாக இந்தியா-வளைகுடா பிரிவினைச் சாத்தியமானதாக வைத்திருக்கின்றன.