இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கிடையேயான 33-வது ஒருங்கிணைந்த ரோந்துப் பயிற்சி
March 21 , 2019 2299 days 664 0
இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கிடையேயான ஒருங்கிணைந்த ரோந்துப் பயிற்சியின் 33-வது பதிப்பானது அந்தமான் நிக்கோபார் தீவின் போர்ட் பிளேயரில் நடைபெற்றது.
இது இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கிடையேயான இராஜதந்திர உறவுகளின் 70-வது ஆண்டுடன் ஒன்றிப் பொருந்துகின்றது.
இந்த ஒருங்கிணைந்த ரோந்துப் பயிற்சியானது பின்வருவனவற்றை எடுத்துக் கூற எண்ணுகின்றது.
இந்தியாவின் அமைதியான இருப்பு மற்றும் கடல்சார் அண்டை நாடுகளுடன் ஒற்றுமை
கடற்படைக் களத்தில் சிறந்த ஒழுங்குமுறைகளை உறுதிப்படுத்துதல்
இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை ஒருங்கிணைத்தல்
இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கிடையேயான தற்பொழுதுள்ள நட்புறவு தொடர்பான பிணைப்புகளை வலுப்படுத்துதல்.
இந்தியாவின் சாகர் திட்டத்தின் கீழ் ஒரு பகுதியாக (பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) இந்தியக் கடற்படையானது இந்திய கடல்சார் நாடுகளுக்கு உதவுவதோடு திறன் கட்டமைப்புத் திட்டத்தில் பங்கு கொள்கிறது.