இந்தியாவின் அணுமின் நிலையங்களை ஆதரிப்பதற்காக வேண்டி சுமார் 10,000 டன் யுரேனியத்திற்கான (2027–2035) $1.9 பில்லியன் யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தில் இந்தியாவும் கனடாவும் கையெழுத்திட்டன.
இந்தியாவின் தூய்மையான எரிசக்தி மற்றும் அணுசக்தி திட்டத்தை ஆதரிப்பதற்காக கனடாவினைச் சார்ந்த நிறுவனமான கேம்கோவால் யுரேனியம் வழங்கப்படும்.
2030 ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை $50 பில்லியனாக அதிகரிப்பதற்கான விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்திற்கான (CEPA) பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கவும் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், சர்வதேச சூரிய சக்தி கூட்டணி மற்றும் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியில் சேர கனடா ஒப்புக் கொண்டது.
பயங்கரவாத எதிர்ப்பு, பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இரு நாடுகளும் முடிவு செய்தன.