2025 ஆம் ஆண்டில் உலகளாவிய புதிய நிலக்கரித் திறன் திட்டங்களில் சுமார் 87% பங்குடன், புதிய நிலக்கரி சார் மின் உற்பத்தித் திட்டங்களில் சீனாவும் இந்தியாவும் முன்னிலை வகிக்கின்றன.
சீனா முதன்மையாக கடந்த கால எரிசக்தி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும், எரிசக்தி பாதுகாப்பிற்கும் ஒரு தீர்வாக சுமார் ஒரு தசாப்தத்தில் அதன் அதிகபட்ச விகிதமாக வெறும் ஆறு மாதங்களில் 21 GW திறன் கொண்ட புதிய நிலக்கரி திறன் அமைப்பை உருவாக்கியது.
நிலக்கரி குவிப்பு இருந்த போதிலும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் (சூரிய, காற்று, நீர்) விரைவான விரிவாக்கத்தினால், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீனாவின் CO₂ உமிழ்வு ~1% குறைந்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா 5.1 GW திறன் கொண்ட புதிய நிலக்கரி ஆலைகளைத் தொடங்கியது என்பதோடு 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 92 GW அளவிலான கூடுதல் நிலக்கரித் திறன் கொண்ட ஒரு பெரிய திட்டம் முன்மொழியப் பட்டது.
இந்தியா அதன் மின்சார உற்பத்தியில் சுமார் 70% அளவிற்கு நிலக்கரியை இன்றும் பெரிதளவில் சார்ந்துள்ள நிலையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மிகத் தீவிரமாக விரிவுபடுத்தும் அதே வேளையில் (2025 ஆம் ஆண்டிற்குள் 220 GW நிறுவப்பட்டது) ஒரு "இரட்டைப் பாதை" எரிசக்தி உத்தியைக் கொண்டுள்ளது.
நிலக்கரிப் பயன்பாட்டின் விரிவாக்கத்துடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியின் இந்த இரட்டைப் பயன்பாட்டுத் தன்மை, வெப்பமயமாதலை 1.5°C ஆகக் கட்டுப்படுத்தும் பாரிசு உடன்படிக்கையின் இலக்கை அடைவதற்கான உலகளாவிய முன்னெடுப்பினைச் சிக்கலுக்கு உள்ளாக்குகிறது.