இந்தியா மற்றும் நீர்மின் நிலையத் திட்டங்கள் – 2030
July 6 , 2021 1484 days 617 0
இந்திய நாடானது 2030 ஆம் ஆண்டுக்குள் 26 GW திறனுடைய (அல்லது 26,000 MW) நீர்மின் நிலையங்களை நிறுவும் என கணிக்கப் பட்டுள்ளது.
சர்வதேச எரிசக்தி முகமையினால் வெளியிடப்பட்ட “நீர்மின் நிலைய சிறப்புச் சந்தை அறிக்கை – 2030 ஆம் ஆண்டுக்கான பகுப்பாய்வு மற்றும் முன்கணிப்பு” எனும் அறிக்கையில் இது கூறப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் இயங்கி வரும் 207 நீர்மின் நிலையங்களின் ஒட்டு மொத்த திறன் ஆனது 46,209 MW ஆகும்.
2021 மற்றும் 2030 ஆகிய ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தில் உலகளாவிய நீர்மின் நிலையங்களின் திறனானது 17% வரை (அ) 230 GW திறன் வரை உயரும்.
2030 ஆம் ஆண்டில் நீர்மின் ஆற்றல் துறையில் உலகளாவிய திறன் வளர்ச்சியில் 40 சதவீதத்துடன் சீனா மிகப்பெரிய நீர்மின்னாற்றல் சந்தையாக திகழும்.
உலகின் மிகப்பெரிய நீர்மின் நிலையமானது சீனாவில் உள்ள த்ரீ கார்ஜஸ் என்ற அணையாகும்.