இந்தியா மற்றும் போட்ஸ்வானா – சிவிங்கிப் புலிகள் இடமாற்ற ஒப்பந்தம்
November 16 , 2025 57 days 117 0
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அரசு முறை வருகையின் போது, சிவிங்கிப் புலிகள் வளங்காப்புத் திட்டத்தின் கீழ் போட்ஸ்வானாவிலிருந்து 8 சிவிங்கிப் புலிகளை இடமாற்றம் செய்ய இந்தியாவும் போட்ஸ்வானாவும் அதிகாரப் பூர்வமாக ஒப்புக் கொண்டன.
எட்டு சிவிங்கிப் புலிகளில் ஐந்து, அடையாள ஒப்படைப்பின் ஒரு பகுதியாக மொகோலோடி இயற்கை வளங்காப்பகத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட காப்பு மையத்தில் விடுவிக்கப்பட்டன.
இந்தியா முன்னர் 2022 ஆம் ஆண்டில் நமீபியாவிலிருந்து எட்டு சிவிங்கிப் புலிகளையும், 2023 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிலிருந்து பன்னிரண்டு சிவிங்கிப் புலிகளையும் இறக்குமதி செய்தது.
தற்போது 16 சிவிங்கிப் புலிகள் இந்தியாவில் பிறந்துள்ளதுடன், 27 சிவிங்கிப் புலிகள் இந்தியாவில் உள்ளன.