இந்தியா மற்றும் ரஷ்யாவின் 22வது வருடாந்திர உச்சி மாநாடு
July 13 , 2024 394 days 256 0
இந்தியா மற்றும் ரஷ்யாவின் 22வது வருடாந்திர உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமரும் ரஷ்ய அதிபரும் ரஷ்யாவில் கலந்து கொண்டனர்.
இந்தியாவும் ரஷ்யாவும் 2030 ஆம் ஆண்டிற்குள் இருதரப்பு வர்த்தகத்தை 100 பில்லியன் டாலர்களாக உயர்த்துவதற்கு ஒப்புக் கொண்டுள்ளன.
இந்தியாவும் ரஷ்யாவும் பருவநிலை மாற்றம், துருவ ஆராய்ச்சி, சட்ட ரீதியிலான நடுவண் விவகாரங்கள் மற்றும் மருந்துகளுக்கான சான்றிதழ் அளிப்பு மற்றும் பிற பிரச்சினைகள் குறித்த நிறுவனங்களுக்கு இடையேயான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.