இந்தியா மற்றும் ரஷ்யா ஆகியவற்றிற்கிடையேயான ஒப்பந்தம் - கச்சா எண்ணெய்
February 9 , 2020 2169 days 768 0
மத்தியப் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் மற்றும் ரோஸ்நெப்ட் நிறுவனத்தின் தலைவர் ஆகியோர் முதலாவது கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ரோஸ்நெப்ட் ஆனது ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமாகும்.
கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்காக அரசிற்குச் சொந்தமான இந்தியன் ஆயில் கழகம் மற்றும் ரோஸ்நெப்ட் ஆகியவற்றிற்கு இடையே ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது.
இந்தியாவானது உலகின் 3வது மிகப்பெரிய எரிசக்தி நுகர்வோராக விளங்குகின்றது. இந்தியா தனது எண்ணெய்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக உலகளவில் 83% எண்ணெய்யை இறக்குமதி செய்கின்றது.