இந்தியா மற்றும் ருமேனியா இடையிலான உத்திசார் கூட்டாண்மை
July 26 , 2026 29 days 116 0
இந்தியா - ருமேனியா உறவுகளை வலுப்படுத்துவதற்காக வேண்டி, இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ருமேனியாவுக்குச் சென்று அந்நாட்டு அதிபர் நிகுசோர் டான் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களில் இந்தியக் குடியரசுத் தலைவர் ஒருவர் ருமேனியாவுக்கு மேற்கொண்ட முதல் அரசுமுறைப் பயணம் இதுவாகும்.
வர்த்தகம், முதலீடு, விநியோகச் சங்கிலிகள், கல்வி, கலாச்சாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.
இந்தியா மற்றும் ருமேனியா அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவதையும், வணிக ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
தூதரக உறவுகளின் 80 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், 2028 ஆம் ஆண்டை "இந்தியா-ருமேனியா புத்தாக்க ஆண்டு" ஆகக் கொண்டாட இரு தரப்பும் ஒப்புக் கொண்டன.