TNPSC Thervupettagam

இந்தியா மற்றும் ருமேனியா இடையிலான உத்திசார் கூட்டாண்மை

July 26 , 2026 3 days 60 0
  • இந்தியா - ருமேனியா உறவுகளை வலுப்படுத்துவதற்காக வேண்டி, இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ருமேனியாவுக்குச் சென்று அந்நாட்டு அதிபர் நிகுசோர் டான் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
  • கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களில் இந்தியக் குடியரசுத் தலைவர் ஒருவர் ருமேனியாவுக்கு மேற்கொண்ட முதல் அரசுமுறைப் பயணம் இதுவாகும்.
  • வர்த்தகம், முதலீடு, விநியோகச் சங்கிலிகள், கல்வி, கலாச்சாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.
  • இந்தியா மற்றும் ருமேனியா அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவதையும், வணிக ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • தூதரக உறவுகளின் 80 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், 2028 ஆம் ஆண்டை "இந்தியா-ருமேனியா புத்தாக்க ஆண்டு" ஆகக் கொண்டாட இரு தரப்பும் ஒப்புக் கொண்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்