இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கிடையேயான இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பேச்சுவார்த்தைகள்
September 5 , 2018 2545 days 760 0
இந்தியா மற்றும் வங்கதேச எல்லைப் படைப்பிரிவினர்களுக்கிடையேயான இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பேச்சுவார்த்தையானது புதுதில்லியில் தொடங்கியது.
இந்தப் பேச்சுவார்த்தையானது, எல்லைக்கு அப்பால் நடக்கும் குற்றங்களான போதைப் பொருள் கடத்தல், கால்நடைகளை அபகரித்தல் மற்றும் சர்வதேச எல்லைகளுக்கு இடையே நடக்கும் ஆயுதக் கடத்தல்களை தடுப்பதற்காக இருநாட்டுக்கிடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான நோக்கம் ஆகியவற்றைக் கொண்டதாகும்.
இது 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து இரு தரப்பினருக்கிடையே நடக்கும் 47வது இயக்குனர் ஜெனரல் அளவிலான பேச்சுவார்த்தையாகும். கடந்த இயக்குனர் ஜெனரல் அளவிலான பேச்சுவார்த்தையானது 2018 ஆண்டு ஏப்ரல் மாதம் டாக்காவில் நடைபெற்றது.