இந்தியா மின்சார வினியோக அமைப்பு கட்டுப்பாட்டாளர் நிறுவனம்
November 22 , 2022 1005 days 408 0
இந்தியாவின் தேசிய விநியோகக் கட்டமைப்பு இயக்குநரான பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (POSOCO) ஆனது இந்தியா மின்சார வினியோக அமைப்பு கட்டுப்பாட்டாளர் நிறுவனம் என மறுபெயரிடப்பட்டது.
முழுக்க முழுக்க மத்திய அரசிற்குச் சொந்தமான நிறுவனமான இது மின்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது.
இந்திய மின்சார வினியோக அமைப்பு, ஒரு தனி நிறுவனமாக, மின்சாரம் அனுப்புதல் செயல்பாடுகளை வழங்கியது.
இது தேசிய மின்சாரம் அனுப்புதல் மையம் (NLDC) மற்றும் 5 பிராந்திய மின்சாரம் அனுப்புதல் மையங்கள் (RLDCs) ஆகியவற்றின் செயல்பாடுகளை மேற்பார்வை செய்கிறது.
தேசிய மின்சாரம் அனுப்புதல் மையம் என்பது தேசிய மின்சக்தி அமைப்பின் ஒருங்கிணைந்தச் செயல்பாட்டை உறுதி செய்யும் ஒரு உச்ச அமைப்பாகும்.