TNPSC Thervupettagam

இந்தியா முழுவதும் உள்ள வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகள்

August 3 , 2025 3 days 12 0
  • ஒரு புதிய ஆய்வு, முக்கியமாக இமயமலை, மேற்குக் கடற்கரை மற்றும் மத்திய இந்தியாவில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகளை அடையாளம் கண்டு உள்ளது.
  • மிகவும் பாதிக்கப்படக் கூடிய துணைப் படுகைகள் பிரம்மபுத்திரா, நர்மதா, தபதி, மகாநதி, பிராமணி மற்றும் மேற்கு கடற்கரை நதிப் படுகைகளில் அமைந்துள்ளன.
  • கோதாவரி, கங்கை, மஹி மற்றும் சிந்து நதிப் படுகைகளின் சில பகுதிகளிலும் அதிக வெள்ள ஆபத்துள்ளப் பகுதிகள் காணப்படுகின்றன.
  • பொதுவாக கடுமையான மழை பெய்யும் நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்குள் திடீர் வெள்ளம் ஏற்படும், மேலும் அவை பெரும்பாலும் மலைப்பாங்கான பகுதிகளில் மேக வெடிப்புகளால் ஏற்படுகின்றன.
  • முக்கியக் காரணங்களில் நீர் நிரப்பு நிறைவுற்ற மண், அணைகளில் இருந்து திடீரென நீர் வெளியேற்றம் மற்றும் நகர்ப்புற மேம்பாடு காரணமாக விரைவான மேற்பரப்பு நீரோட்டம் ஆகியவை அடங்கும்.
  • 2020 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் திடீர் வெள்ள வழிகாட்டுதல் அமைப்பு, இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு முன்பே முன் கூட்டியே எச்சரிக்கைகளை வழங்கச் செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்