TNPSC Thervupettagam

இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு 2025

December 9 , 2025 3 days 65 0
  • 23வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாடு ஆனது புது டெல்லியில் நடத்தப் பட்டது.
  • இந்த உச்சி மாநாடு ஆனது உத்தி சார் கூட்டாண்மைப் பிரகடனத்தின் (2000) 25வது ஆண்டு நிறைவைக் குறித்தது.
  • இந்தக் கூட்டாண்மை 2010 ஆம் ஆண்டில் "சிறப்பு மற்றும் சலுகை பெற்ற உத்தி சார் கூட்டாண்மை"யாக மேம்படுத்தப்பட்டது.
  • எரிசக்தி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்கும் அப்பால் வர்த்தகத்தை பல்வகைப் படுத்துவதற்கு அந்நாடுகளின் தலைவர்கள் 2030 ஆம் ஆண்டு பொருளாதாரத் திட்டத்தினை ஏற்றுக் கொண்டனர்.
  • இருதரப்பு வர்த்தக இலக்குகள் ஆனது 2024–25 ஆம் ஆண்டில் 68.7 பில்லியன் டாலரில் இருந்து 2030 ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் டாலராக நிர்ணயிக்கப் பட்டது.
  • ஒப்பந்தங்களில் யூரேசிய பொருளாதார ஒன்றியத்துடனான விரைவான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA), எரிசக்தி ஒத்துழைப்பு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, இணைப்புத் திட்டங்கள், ஆர்டிக் ஒத்துழைப்பு மற்றும் ரஷ்யக் குடி மக்களுக்கான 30 நாட்கள் அளவிலான நுழைவு இசைவுச் சீட்டு இல்லாத இணைய வழிச் சுற்றுலா நுழைவு ஆகியவை அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்