இரண்டாவது இந்திய-ரஷ்யா மூலோபாய பொருளாதார உரையாடல் ஆனது புதுடெல்லியில் நடத்தப் பட்டது.
நிதி ஆயோக்கின் துணைத் தலைவரான ராஜீவ் குமாரால் இந்தியா பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டது.
இந்த உரையாடல் அமைப்பானது நிதி ஆயோக் மற்றும் ரஷ்யக் கூட்டமைப்பின் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்திற்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து நிறுவப்பட்டது.
இது 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 05 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற வருடாந்திர இந்திய-ரஷ்யா இருதரப்பு மாநாட்டின் 19-வது பதிப்பின் போது தொடங்கப்பட்டது.
இதன் முதல் கலந்துரையாடல் கூடுகையானது 2018 ஆம் ஆண்டு நவம்பர் 25-26 ஆகிய தேதிகளில் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் நடைபெற்றது.