இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பிரான்சின் விண்வெளி நிறுவனமான CNES (National Centre for Space Studies) ஆகியவை இணைந்து மூன்றாவது கூட்டு விண்வெளித் திட்டத்தில் பணியாற்றி வருகின்றன.
இஸ்ரோ மற்றும் CNES ஆகிய நிறுவனங்கள் TRISHNA எனப்படும் வெப்ப அகச்சிவப்பு புகைப்பட உபகரணத்தைக் கொண்டு புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோள் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஒரு சாத்தியக்கூறு ஆய்வினை முடித்துள்ளன.
TRISHNA (Thermal infraRed Imaging Satellite for High resolution Natural resource Assessment) ஆனது நீர்சுழற்சி முறையைக் கண்காணித்து அதனை சிறப்பாகப் பயன்படுத்த உதவும்.
CNES நிறுவனத்தின் AGROS ஆனது இஸ்ரோவின் OCEANSAT-3 செயற்கைக்கோளுடன் ஒன்றிணைக்கப்படும்.
ARGOS என்பது உலகளாவிய செயற்கைக்கோள் சார்ந்த தரவு சேகரிப்பு மற்றும் இடங்காட்டி அமைப்பு ஆகும்.
இது சுற்றுச்சூழலைப் பற்றி அறிவதற்கும் அதனைப் பாதுகாப்பதற்கும் வேண்டி அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.