இந்தியா – பிரேசில் – தென் ஆப்பிரிக்கா நாடுகளின் பெண்கள் மன்றத்தின் சந்திப்பு
March 19 , 2021
1609 days
619
- 6வது இந்தியா – பிரேசில் – தென் ஆப்பிரிக்கா நாடுகளின் பெண்கள் (IBSA - India-Brazil-South Africa) மன்றத்தின் சந்திப்பு காணொலி மூலம் நடைபெற்றது.
- இச்சந்திப்பிற்கு இந்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைநல மேம்பாட்டுத் துறை அமைச்சர் தலைமை தாங்கினார்.
- இம்மன்றமானது பெண்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கப் பங்காற்றிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தது.
- IBSA என்பது இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா என்ற நாடுகளை ஒன்றிணைக்கும் ஒரு தனித்துவமிக்க முத்தரப்பு ஒத்துழைப்பு மன்றமாகும்.
- இந்த நாடுகள் வெவ்வேறு கண்டங்களில் அமைந்து மூன்று பெரிய மக்களாட்சி மற்றும் பொருளாதார அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளாகும்.
Post Views:
619