இந்தியா – 5வது மிகப்பெரிய அந்நியச் செலாவணி இருப்பு
July 22 , 2021 1474 days 642 0
இந்திய நாடானது 608.99 பில்லியன் டாலர் மதிப்பிலான அந்நியச் செலாவணி இருப்புகளோடு ஜப்பான், சீனா, ரஷ்யா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பிறகு உலகின் 5வது மிகப்பெரிய அந்நியச் செலாவணி இருப்பினைக் கொண்ட ஒரு நாடாக உருவெடுத்துள்ளது.
2020-21 ஆம் ஆண்டில் மூலதனம் மற்றும் நடப்புக் கணக்குகளில் இந்தியாவின் வரவுச் செலவு சமநிலையானது அதிகரித்துள்ளது.
நாட்டின் அந்நியச் செலாவணி உயர்விற்கு இவையே பெரும் பங்காற்றின.
இந்தியாவின் தற்போதைய அந்நியச் செலாவணி இருப்புகளானது 18 மாதங்களுக்கும் மேல் என்ற அளவில் இறக்குமதிகளுக்குக் கொடுப்பனவுகளை வழங்க போதுமானதாகும்.
அந்நியச் செலாவணி இருப்புகளானது பத்திரங்கள், வெளிநாட்டுப் பணங்கள், தங்கம், வங்கி வைப்புத் தொகைகள், நிதிச் சொத்துகள் மற்றும் சிறப்பு கடன் வாங்கும் உரிமைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.