ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் விலையில்லா இயற்கை வேளாண்மையை (ZBNF - Zero Budget Natural Farming) நடைமுறைப் படுத்துவதற்காக அம்மாநில அரசு ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
விலையில்லா இயற்கை வேளாண்மை என்பது வேதியியல் உரம் அல்லாத ஒரு விவசாய வேளாண் நடைமுறையாகும்.
இந்திய அரசானது 2015 - 16 ஆம் ஆண்டு முதல் பரம்பரகத் கிருஷி விகாஸ் யோஜனா மற்றும் ராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா ஆகிய திட்டங்களின் மூலம் ZBNFஐ ஊக்குவித்து வருகின்றது.
ZBNF ஆனது கர்நாடகா மாநிலத்தால் முதன்முதலில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
2024 ஆம் ஆண்டு வாக்கில் மாநிலத்தில் 100% இயற்கை விவசாயத்திற்கான இலட்சியத் திட்டத்தை அறிமுகப்படுத்திய முதலாவது மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் உருவெடுத்துள்ளது. இத்திட்டத்தை அம்மாநிலம் 2018 ஆம் ஆண்டில் உருவாக்கியது.