81 ஆவது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் (UNGA) ஒரு பகுதியாக, இந்தியா-CARICOM வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் (FMM) நியூயார்க்கில் நடைபெற்றது.
2024 ஆம் ஆண்டு நவம்பரில் கயானாவில் நடைபெற்ற 2 ஆவது இந்தியா-CARICOM (கரீபியன் சமூகம்) உச்சிமாநாட்டைத் தொடர்ந்து இக்கூட்டம் நடைபெற்றது.
12 CARICOM நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், பெலிஸ் பிரதிநிதிகள் மற்றும் CARICOM பொதுச் செயலாளர் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
வர்த்தகம் மற்றும் முதலீடு, விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு, டிஜிட்டல் ஆளுகை, பருவநிலை பின்னடைவு மற்றும் ஆற்றல் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து விவாதங்கள் நடைபெற்றன.
ஐக்கிய நாடுகளின் (UN) சீர்திருத்தங்கள், பருவநிலை மாற்றம், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நாடுகடந்த குற்றங்கள் ஆகியவற்றில் ஒத்துழைக்க இந்தியாவும் CARICOM அமைப்பும் ஒப்புக் கொண்டன.
2028–29 காலத்திற்கான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் (UNSC) இந்தியாவின் வேட்புமனுவை ஆதரிக்க CARICOM முடிவு செய்தது.