இந்தியா - ILO ஒப்பந்தம் 2025
September 23 , 2025
3 days
41
- இந்தியா 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் (ILO) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
- உலகளாவிய வேலைவாய்ப்பை ஆதரிப்பதற்காக தொழில்களின் சர்வதேச குறிப்பு வகைப்பாட்டை உருவாக்குவதே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
- இந்த முன்னெடுப்பு மக்கள்தொகை மாற்றங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலால் ஏற்படும் உலகளாவிய திறன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்கிறது.
- 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் தலைமைப் பதவியின் போது G20 தலைவர்கள் இந்தக் கட்டமைப்பை அங்கீகரித்தனர்.
- இந்த வகைப்பாடானது தரவு ஒப்பீட்டை மேம்படுத்தும் மற்றும் திறன்களின் பரஸ்பர அங்கீகாரத்தை ஊக்குவிக்கும்.
- இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் பசுமை, டிஜிட்டல் மற்றும் பராமரிப்புத் துறைகளில் ஒரு சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் சோதனைத் திட்டம் நடத்தப்படும்.
Post Views:
41